ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ்பெற திட்டம்

ஆப்கானில் இருக்கும் அனைத்து அமெரிக்கத் துருப்புகளும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வீடு திரும்புவார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஆப்கானில் இருக்கும் அமெரிக்கத் துருப்புகள் 2,500 ஆக குறைக்கப்படும் என்று அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறிய நிலையிலேயே டிரம்ப் கடந்த புதன்கிழமை இதனைத் தெரிவித்திருந்தார்.

அமெரிக்கா மற்றும் தலிபான்களுக்கு இடையே கடந்த பெப்ரவரியில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி தலிபான்களின் தீவிரவாத எதிர்ப்பு உத்தரவாதத்திற்கு பகரமாக 2021 மே மாதத்திற்குள் வெளிநாட்டுத் துருப்புகள் ஆப்கானில் இருந்து வெளியேற இணக்கம் எட்டப்பட்டது.

இதற்காக ஆப்கான் அரசுடன் தலிபான்கள் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கு வரவேண்டி இருப்பதோடு அதிகார பகிர்வு முறை ஒன்றுக்கு இணங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பரில் ஆப்கானில் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கை 5,000 மற்றும் 4,000க்கும் இடையே குறைக்கப்படும் என்று டிரம்ப் மற்றும் ஏனைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் டிரம்பின் புதிய அறிவிப்பு அவரது உத்தரவா அல்லது வாக்குறுதியா என்ற தெளிவில்லாமல் உள்ளது.

Fri, 10/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை