Header Ads

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது லாகோசில் சூடு: பலர் பலி

நைஜீரியாவின் மிகப்பெரிய நகரான லாகோசில் பொலிஸ் கொடுமைகளுக்கு எதிராக பங்கேற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் பலரும் கொல்லப்பட்டு மற்றும் காயமடைந்துள்ளனர்.

இதில் படையினர் சூடு நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டதாக சாட்சியங்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழப்புகள் பற்றி நம்பகமான தகவல்களை பெற்றிருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

எனினும் இதனை இராணுவம் மறுத்தபோதும் இதுபற்றி விசாரணை நடத்த அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

லாகோசின் லெக்கி டோல் பிளாசா பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறி ஒன்று திரண்டவர்கள் மீதே நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொள்ளைத் தடுப்பு சிறப்பு பொலிஸ் பிரிவை கலைக்கக் கோரியே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தப் பொலிஸ் பிரிவு மிரட்டி பணம் பறித்தல், சித்திரவை மற்றும் நீதிக்கு புறம்பான கொலைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

Thu, 10/22/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.