இரத்தினபுரி மாவட்டத்தில் கிராமிய பாலங்கள் திட்டம்

இராஜாங்க அமைச்சர் லான்சாவினால் ஆரம்பம்

கயிற்றுப் பாலங்கள்,சிறிய வகை பாலங்கள் மற்றும் மரப் பாலங்களுக்கு பதிலாக கிராமப்புற பாலங்கள் செயல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த பாலங்கள் கயிற்றுப் பாலங்கள், சிறிய வகை பாலங்கள் மற்றும் மரப் பாலங்களுக்கு பதிலாக கிராமப்புற பாலங்கள் கட்டும் முதல் கட்ட தொடக்க விழா (01) இரத்தினபுரி மாவட்டத்தில் கிராமப்புற வீதிகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவின் தலைமையில் நடைபெற்றது.

அதன்படி, இலங்கை பொறியியல் துறையின் பங்களிப்புடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையில் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள கலவான ஹபுகொட பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.

சிறுதொழில் பயிர் அபிவிருத்தி, அதனுடன் தொடர்புடைய தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவின் வேண்டுகோளின் பேரில் ஹபுகொட பாலத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்த கிராமப்புற பாலம் திட்டத்தின் முதல் கட்டம் இரத்தினபுரி,பதுளை,கேகாலை மற்றும் குருநாகலை மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.

கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துதல், சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல் மற்றும் மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு உதவுதல் ஆகிய நோக்கங்களுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்டுள்ள "சுபீட்சத்தின் நோக்கு’ ஏற்ப இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பொருளாதார புத்துயிர் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதேசமயம்,இரத்தினபுரி மாவட்டத்தில் கிரியெல்ல தெஹெரகொட, குருவிட்ட, தலாவிட்டிய, எஹெலியகோட இத்தமல்கொட, போபத்எல்லா மற்றும் எரந்தகொட ஆகிய இடங்களில் பாலங்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்த பாலம் திட்டத்தை செயல்படுத்த 25 மாவட்டங்களிலிருந்தும் திட்டங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், 5,000 க்கும் மேற்பட்ட சிறிய பாலம் திட்டங்களை அமைச்சு பெற்றுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார்.

பெறப்பட்ட திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் இந்த பாலங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் விரும்புகிறது என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உள்ளூர் அரசியல் பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொறியியலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Sat, 10/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை