Header Ads

ஆப்கானில் ஹெலிகள் மோதுண்டு 9 பேர் பலி

தெற்கு ஹெல்மாண்ட் மாகாணத்தில் காயமடைந்த படையினரை ஏற்றிவந்த இரு ஆப்கான் இராணுவ ஹெலிகொப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். நவா மாகாணத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற இந்த விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாரே காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பகுதியில் ஆப்கான் படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையே ஒருசில நாட்களாக உக்கிர மோதல் இடம்பெற்று வரவதோடு, ஆப்கான் இராணுவத்திற்கு ஆதரவாக அமெரிக்கா வான் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது.

Thu, 10/15/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.