தனிமைப்படுத்தப்பட்ட 927 பேர் இன்று வீட்டுக்கு

தனிமைப்படுத்தப்பட்ட 927 பேர் இன்று வீட்டுக்கு-927 Quarantined Persons Set to Leave for Homes-NOCPCO

- நேற்று 7,870 PCR சோதனைகள்; இதுவரை 477,156 சோதனைகள்
- நேற்று குணமடைந்த 32 பேரும் மினுவாங்கொடை கொத்தணியைச் சேர்ந்தவர்கள்

முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 927 பேர் இன்றையதினம் (29) தங்களது தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பவுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த 927 பேர், PCR சோதனைகளுக்குப் பிறகு இவ்வாறு தங்களது வீடுகளுக்கு திரும்பவுள்ளனர்.

அதன்படி பின்வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 927 பேர் இன்று வீடு திரும்பவுள்ளனர்.

  • பியகம விலேஜ் 02 பேர்
  • பிங்கிரிய ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை 164 பேர்
  • மீரிகமை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை 102 பேர்
  • பஸ்துன்ரத ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை 94 பேர்
  • தம்பதெனிய ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை 175 பேர்
  • பெணிதெனிய ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை 139 பேர்
  • கொக்கல ரிசோர்ட் 22 பேர்
  • தியகம விளையாட்டரங்கம் 13 பேர்
  • விடத்தல்பளை ரிசோர்ட் 17 பேர்
  • ரந்தம்பை 137 பேர்
  • இராணுவ பயிற்சி பாடசாலை 34 பேர்
  • வஸ்கடுவ சிற்ரஸ் ஹோட்டல் 28 பேர்

அந்த வகையில், முப்படையினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இன்று (29) வரை 58,697 நபர்கள் தங்களது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து, வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

அத்துடன் தற்போது வர முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 70 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 7,039 பேர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், நேற்றையதினம் (28) மாத்திரம் 7,870 PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதோடு, இலங்கையில் இதுவரை 477,156 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதேவேளை நேற்றையதினம் குணமடைந்து வீடு திரும்பிய 32 பேரும் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thu, 10/29/2020 - 10:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை