ரொஹிங்கிய அகதி முகாமில் ‘கும்பல்’ மோதலில் 8 பேர் பலி

தெற்கு பங்களாதேஷில் இருக்கும் ரொஹிங்கிய அகதி முகாமுக்குள் பல்வேறு குற்ற கும்பல்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டிருப்பதோடு பலரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு, தீவைப்பு, போட்டி கும்பல்களுக்கு இடையிலான கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் 12 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த அகதி முகாம் உலகின் மிகப் பெரிய அகதி முகாமாக உள்ளது.

இங்கு மியன்மார் வன்முறைகள் காரணமாக 2017 ஆம் ஆண்டு தொடக்கம் தப்பி வந்த ஒரு மில்லியன் பேர் வரை உள்ளனர்.

இரு கும்பல்கள் அகதி முகாமில் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயற்சிப்பதாக மேலதிக பொலிஸ் பரிசோதகர் ரபீகுல் இஸ்லாம் தெரிவித்தார். போதைக் கடத்தல் தொடர்பிலேயே இந்த வன்முறைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறான வன்முறைகள் காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு தொடக்கம் 100க்கும் அதிகமான ரொஹிங்கிய அகதிகள் கொல்லப்பட்டிருப்பதாக மனித உரிமை குழுக்கள் குறிப்பிட்டுள்ளன.

Sat, 10/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை