கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 7875 ஆக உயர்வு

3803 பேர் குணமடைவு என சுகாதார அமைச்சு தகவல்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 7875ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை நேற்றுவரை 3803 வைரஸ் தொற்று நோயாளிகள் பூர ணமாக குணமடைந்து ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் 4054 பேர் பல்வேறு வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய நேற்று முன்தினம் கொரோ னா வைரஸ் தொற்று 16ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார். அவர் கொழும்பு இரண்டைச் சேர்ந்தவர் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

நேற்றையதினம் முற்பகல் வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 400 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர்களில் 1041 பேர் ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிவோர் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் பிரபுக்கள் பாதுகாப்பு சேவையில் பணியாற்றும் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் 10 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ராஜகிரிய, களனி மற்றும் களுபோவில பகுதிகளில் உள்ள விசேட அதிரடிப்படை முகாம்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்திய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட 16 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில்அவர்களுடன் தொடர்புடைய வர்களுக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை மலையகத்தில் தலவாக்கலை மற்றும் கொட்டகலை பகுதிகளில் 3 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் பேலியகொடை கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் எஸ். சௌந்தர் ராகவன் தெரிவித்துள்ளார். அதனால் கொட்டைகளை நகரில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதே வேளை நாட்டில் இதுவரை 4 லட்சத்து 55 ஆயிரம் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ள்ள நிலையில் நேற்று முன்தினம் மாத்திரம் 9189 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

அதேவேளை முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 55 ஆயிரத்து 426 பிசி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று வரை உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 433 கோடிகளை தாண்டியுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 10/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை