எதிர்வரும் 72 மணிநேரம் மிகவும் முக்கியமானது

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக அடுத்த 72 மணிநேரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், திவுலப்பிட்டியிலுள்ள ஆடை தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் பற்றிய கொரோனா பரிசோதனை அறிக்கைகள் இந்த காலப்பகுதிக்குள் கிடைக்க இருப்பதால் இந்த காலம் மிகவும் முக்கியமானது.

கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்கள் அதிகமாக இருக்கும் காரணத்தினாலேயே 3 பொலிஸ் பிரிவிற்கு மாத்திரமே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இப்பகுதிகளுக்கு கடந்த 7 நாட்களுக்குள் வருகை தந்த பலர் இருக்கலாம்.

அத்துடன் ஊழியர்களை சந்திப்பதற்காக இலங்கையின் பல்வேறு பாகங்களில் இருந்து மக்கள் வருகை தந்துள்ளதாக அறிய கிடைத்துள்ளது. எனவே, இவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனைகளை மேற்கொள்ளும் வரையில் எவ்வாறான நிலைமை ஏற்படும் என்று கூற முடியாது.

அத்தியவசிய தேவையின்றி வௌியே செல்லுவதனை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். எதிர்வரும் 72 மணித்தியலாங்களுக்குள் நாங்கள் இதனை இனங்கண்டு கொள்ளும் வரையில், யாரேனும் இப்பகுதிகளுக்கு வருகை தந்திருந்தால் அதனை ஒருபோதும் மறைக்க வேண்டாம்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

காய்ச்சல் இருந்தால் கட்டாயம் பீசீஆர் பரிசோதனைக்குமுகங்கொடுக்குமாறும் அவர் கம்பஹ மாவட்ட மக்களிடம் கோரியுள்ளார்.

திவுலபிடிய பகுதி பெண் ஒருவருக்கு கொரோனா தொற்றியதையடுத்து அவர் பணியாற்றிய தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.அங்கு பணியாற்றும் பலருக்கு கொரோனா தொற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு அவரின் மகளுக்கும் கொரோனா தொற்றியது உறுதியாகியுள்ளது.

கம்பஹ மாவட்டத்தில் பல கிராமங்கள் மூடப்பட்டுள்ளதோடு சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது தெரிந்ததே.(பா)

 

பரிசோதனை அறிக்கை கிடைக்கவுள்ளது - -இராணுவத் தளபதி

Tue, 10/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை