ஜனாதிபதி ஆணைக்குழுவில் 7 மணித்தியாலம் வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் வாக்குமூலம் வழங்குவதற்காக ஆஜராகிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

நேற்று முற்பகல் ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுமார் 7 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

வாக்குமூலம் வழங்கிய பின் ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாம் மிகுந்த வேதனை அடைவதாகவும் விசாரணைகளை நடத்தும் ஆணைக்குழுவுக்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேற்படி ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக கடந்த 22 ஆம் திகதி விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு இணங்கவே நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மேற்படி ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார்.

ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி இடம் வீட்டுக்குச் சென்றே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் முதல்தடவையாக முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார்.

நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகரவும் ஆணைக்குழு வளாகத்திற்கு சென்றிருந்ததுடன் கத்தோலிக்க மத குருமார் சிலரும் அங்கு காணப்பட்டனர்.(ஸ)முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 10/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை