ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்கள் 567ஆக அதிகரிப்பு

- ஊழியர்களின் குடும்பத்தினரை சுய தனிமைப்படுத்த அறிவுறுத்தல்
- இதுவரை ஒரே நாளில் பதிவாகிய அதிகூடிய தொற்றாளர்கள் இன்று பதிவு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணி புரிந்த மேலும் 246 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதற்கமைய, மினுவாங்கொடையில் கொரோனா தொற்றுக்குள்ளான 567 பேர் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், இன்றையதினம் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, மினுவாங்கொடை Brandix ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் தங்களது வீடுகளில் தங்கியிருக்குமாறும், வெளியில் எங்கும் செல்லாதிருக்குமாறும், இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

Tue, 10/06/2020 - 14:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை