39 மனுக்கள் மீதான பரிசீலனை இன்று

20 ஆவது திருத்தம்;

20 ஆவது திருத்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும்.  பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது  அரசியலமைப்புத் திருத்த சட்ட மூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள 39 விஷேட மனுக்கள், அம்மனுக்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 07 இடையீட்டு மனுக்கள் மீதான பரிசீலனைகள் (30) 02 ஆவது நாளாக நடைபெற்றது.

அரசியலமைப்பின் 121 ஆவது உறுப்புரையின் பிரகாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த 39 விசேட மனுக்கள் மற்றும் 07 இடையீட்டு மனுக்கள் மீதான பரிசீலனைகள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான விஜித் மலல்கொட, புவனேக அளுவிஹார, சிசிர டி ஆப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் உயர் நீதிமன்றத்தில் (30) இரண்டாவது நாளாகவும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன்போது, இரு நாட்களிலும் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள 39 மனுக்களில் 32 மனுதாரர்கள் சார்பிலான வாதங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. எஞ்சிய மனுதாரர்கள் மற்றும் இடையீட்டு மனுதாரர்கள் மற்றும் சட்ட மாஅதிபரின் வாதங்கள் இன்று (02) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளன.

 

Fri, 10/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை