Header Ads

2ஆம் உலகப் போர் குண்டை அகற்ற போலந்து நடவடிக்கை

பால்டிக் கடலில் கப்பல் கால்வாய் ஒன்றுக்குக் கீழ் இருக்கும் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனால் வீசப்பட்ட இராட்சத குண்டு ஒன்றை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையை போலந்து இராணுவம் ஆரம்பித்துள்ளது.

இதனை ஒட்டி ஸ்வினொஜ்சி துறைமுக நகருக்கு அருகில் இருக்கும் சுமார் 750 குடியிருப்பாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு ஐந்து நாட்கள் வரை எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொல்லிபோய் அல்லது பூகம்ப குண்டு என்று அழைக்கப்படும் இந்த குண்டு 6 மீற்றர் நீளம் கொண்டிருப்பதோடு 5.4 தொன்கள் எடை உடையதாகும். இதன் பாதி அளவு வெடிபொருள் நிரப்பப்பட்டுள்ளது.

ஜெர்மனி கப்பல் ஒன்றை தாக்குவதற்கு 1945 ஆம் ஆண்டு இந்த குண்டு வீசப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நீருக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குண்டை தானியக்கக் கருவி ஒன்றை பயன்படுத்தி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலந்து இதற்கு முன்னர் இத்தனை பெரிய குண்டை நீருக்கடியில் இருந்து செயலிழக்கச் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 10/14/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.