ஆப்கான் கல்விக் கூடத்தில் தாக்குதல்: 24 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி கூடம் ஒன்றிற்கு அருகில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு உயர்நிலை வகுப்புப் பாடங்களை வழங்கும் தனியார் கல்வி கூடத்தில் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஷியா முஸ்லிம் மக்கள் அதிகமாக வசிக்கும் டாஷ் இ பார்ச்சி என்னும் பகுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயில வருவார்கள்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளது. ஆனால் எந்த ஒரு ஆதாரத்தையும் வெளியிடவில்லை.

முன்னதாக இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தாலிபான் தெரிவித்திருந்தது. கல்விக் கூடத்திற்குள் நுழைய முயன்ற தாக்குதல்தாரியை அங்கிருக்கும் காவலர்கள் அடையாளம் கண்டதை அடுத்து குண்டை வெடிக்கச் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் 15 தொடக்கம் 26 வயதான மாணவர்களே அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர்.

 

Mon, 10/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை