Header Ads

அகதி படகு மூழ்கி 21 பேர் உயிரிழப்பு

துனீசிய கடற்கரைக்கு அப்பால் கடந்த வார இறுதியில் மூழ்கிய அகதிப் படகில் இருந்த 21 பேர் உயிரிழந்திருப்பதாக நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் மேலும் நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இதுவரை 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் ஏழு பேர் உயிரிடன் காப்பாற்றப்பட்டனர். தொடர்ந்து காணாமல்போன நிலையில் இருக்கும் நான்கு அல்லது ஐந்து பயணிகளையும் உயிருடன் காப்பாற்றும் வாய்ப்புக் குறைந்துள்ளதாக துனீசியாவின் ஸ்பெக்ஸ் நீதிமன்ற பேச்சாளர் முராத் துர்கி தெரிவித்துள்ளார்.

Thu, 10/15/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.