நியூஸிலாந்து அணிக்கெதிரான ரி-20 தொடர்: மே.தீவுகள் அணி அறிவிப்பு

நியூஸிலாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க மேற்கிந்திய தீவுகள் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில், ஆந்ரே பிளெட்சர், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், உபாதைக்குள்ளாகியுள்ள சகலதுறை வீரர் டுவைன் பிராவோவுக்கு பதிலாக ரொமாரியோ செப்பர்ட் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,

கீரன் பொலார்ட் தலைமையிலான இந்த அணியில், பெபியன் எலன், ரொமாரியோ செப்பர்ட், செல்டோன் கொட்ரெல், ஆந்ரே பிளெட்சர், சிம்ரொன் ஹெட்மியர், பிரெண்டன் கிங், கெய்ல் மேயர்ஸ், ரொவ்மன் பவல், கீமோ போல், நிக்கோலஸ் பூரான், ஒசேன் தோமஸ், ஹெய்டன் வோல்ஷ், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றது.

இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக ரி-20 தொடர் நடைபெறுகின்றது. இதன் முதல்போட்டி நவம்பர் 27ஆம் திகதி ஒக்லாந்து- ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Sat, 10/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை