2000 எத்தியோப்பிய யூதர்கள் இஸ்ரேலில் குடியேற அனுமதி

2,000 எத்தியோப்பிய யூதர்களை இஸ்ரேலில் குடியேறுவதற்கு இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் இந்த விவகாரம் தொடர்பில் கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

இஸ்ரேலில் குடியேற சுமார் 8000 எத்தியோப்பிய சமூகத்தினர் காத்துள்ளனர். இவர்களில் இருந்தே புதிய குடியேறிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

போல்ஷ் மூரா என்று அழைக்கப்படும் இந்த சமூகத்தினர் யூதர்களுக்கு இஸ்ரேலிய பிரஜா உரிமை வழங்கும் நடைமுறையில் தொடர்ச்சியாக பிரச்சினை இருந்து வருகிறது.

அனைத்து யூதர்களுக்கும் இஸ்ரேலிய பிரஜா உரிமை அளிக்கும் இஸ்ரேலிய சட்டத்தின் கீழ் 1984 மற்றும் 1991 இற்கு இடைப்பட்ட காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான எத்தியோப்பிய யூதர்கள் இரகசிய நடவடிக்கைகள் மூலம் இஸ்ரேலுக்கு அழைத்துவரப்பட்டனர்.

அது தொடக்கம் இஸ்ரேலில் எத்தியோப்பிய சமூகத்தின் எண்ணிக்கை 140,000 ஆக அதிகரித்துள்ளது. எனினும் தாம் இனப் பாகுபாட்டுக்கு முகம்கொடுப்பதாக அவர்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Wed, 10/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை