கொலம்பியாவில் கொரோனா தொற்று 1 மில்லியனாக உயர்வு

கொலம்பியாவில் கொவிட் –19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியுள்ளது. அந்தத் தகவலை அந்நாட்டுச் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

வைரஸ் தொற்றால் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கொலம்பியா 8ஆவது நாடாக இணைந்தது.

அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, அர்ஜன்டீனா, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகியவை பட்டியலின் முதல் 7 இடங்களில் உள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொலம்பியாவில் புதிதாக 8,769 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 30,000ஐத் தாண்டியது. கடந்த 10 நாட்களில் மட்டும் அங்கு சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 50 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கொலம்பியாவில் வைரஸ் தொற்றால் சராசரியாக 1 மில்லியன் பேருக்கு 561 பேர் உயிரிழக்கின்றனர்.

 

Mon, 10/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை