கொவிட்–19: புதிய கட்டுப்பாட்டுக்கு எதிராக இத்தாலியில் ஆர்ப்பாட்டம்

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலைத் தாக்கத்தை கட்டப்படுத்துவதற்கு கொண்டுவரப்பட்ட புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிராக இத்தாலியில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.

டூரின் உட்பட பல நகர ங்களில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தீப்பந்தங்களை வீசி எறிந்துள்ளனர். மிலான் நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதோடு நெப்லெஸ் நகரிலும் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.

உணவகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் திரையரங்குகளை மூடும் அரசின் உத்தரவு கடந்த திங்கட்கிழமை அமுலான உடனேயே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிலால், பீட்மொன்ட் உட்பட பல பிராந்தியங்களிலும் இரவு நேர ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இத்தாலி இந்த ஆண்டு ஆரம்பத்தில் கொரோனா தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்டபோதும் கொண்டுவரப்பட்ட கடுமையான முடக்க நிலையை அந்நாட்டு மக்கள் அமைதியாக கடைப்பிடித்தனர்.

Wed, 10/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை