அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று மீண்டும் அதிகரிப்பு

அமெரிக்காவில் மூன்றாம் முறையாக கொவிட்–19 நோய்ப்பரவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

தற்போது ஒரு நாளில் சராசரியாக சுமார் 59,000 புதிய சம்பவங்கள் அங்கு பதிவாகின்றன. ஓகஸ்ட் மாதம் ஆரம்பத்தில் இருந்து பதிவாகியுள்ள மிக அதிகமான அன்றாட எண்ணிக்கை இதுவாகும்.

அடுத்த சில நாட்களில் அந்த எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 5 மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்ட நியூ ஜெர்சியிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

மே மாதத்திற்குப் பின் முதல் முறையாக நியூயோர்க் நகரில் 2,000 நோய்ச் சம்பவங்கள் பதிவாயின. பெரிய அளவிலான தடுப்பு மருந்து விநியோகத்தை அடுத்த ஆண்டில் மேற்கொள்ள நியூயோர்க் திட்டமிடுகிறது.

அமெரிக்கா முழுவதும் மொத்தம் 8.3 மில்லியன் மக்கள் நோயால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 221,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகிலேயே நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.

Fri, 10/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை