கொவிட்–19: பிரான்சில் இரவு நேர ஊரடங்கு

மிக வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உட்பட மேலும் எட்டு நகரங்களில் இரவு நேர ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரவு 9 மணி தொடக்கம் காலை 6 மணி வரை நீடிக்கும் இந்த ஊரடங்கு நாளை சனிக்கிழமை தொடக்கம் குறைந்தது நான்கு வாரங்களுக்கு தொடரும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மெக்ரோன் அறிவித்துள்ளார்.

அங்கு பொது சுகாதார அவசர நிலை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் அதிக அபாயம் கொண்ட பகுதியில் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் உணவு விடுதிகள் மூடப்பட வேண்டும் என்று ஜெர்மனி அறிவித்துள்ளது.

ஜெர்மனியில் கடந்த ஏப்ரலுக்குப் பின் முதல் முறையாக கடந்த புதன்கிழமை புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் 5,000ஐ கடந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலைத் தாக்கம் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஐரோப்பிய நாடுகள் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Fri, 10/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை