19 வயதிற்குட்பட்டோருக்கான உதைபந்தாட்டப் போட்டி

ஸ்ரீ லங்கா புட்போல் அகடமிக் அசோசியேசன் 19 வயதிற்குட்பட்டோருக்கான உதைபந்தாட்டப் போட்டி ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது. சுமார் 32 அகடமிகள் பங்குபற்றும் போட்டியை நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் கொழும்பு றோஸ்கோஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளதுடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் 05ஆம் திகதி இறுதிப்போட்டியை நடாத்த திட்டமிட்டுள்ளது. இப்போட்டிகள் வார இறுதி நாட்களிலேயே இடம் பெறும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படிப் போட்டிகளை நடத்துவது தொடர்பான விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு ஒன்று அண்மையில் மாளிகாகந்தையில் உள்ள அக்ரம் பௌண்டேசனில் அசோசியேசனின் தலைவர் மொஹமட் அக்ரம் தலைமையில் இடம் பெற்றபோது போட்டிகள் தொடர்பான விளக்கங்களையும், எதிர்காலத்தில் உதைபந்தாட்ட துறைகளை முன்னேற்றுவது தொடர்பாகவும் அசோசியேசனின் செயலாளர் ஆர்.ஏ.டானிஸ் அலி விளக்கமளித்தார். அவர் தொடரந்து கருத்து தெரிவிக்கையில் மாவட்ட ரீதியில் இதுவரை 10 அகடமிகள் இருப்பதாகவும் இத்துறையை வளர்க்க தமது அமைப்பு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கும் என்றும் எதிர் வரும் ஐந்து வருடங்களில் இந்த நாட்டில் உதைபந்தாட்ட துறையில் திறமையான வீரர்களை உருவாக்க முடியும் என்றும் அவர்கள் எதிர்காலத்தில் வருமானம் பெறும் வகையில் தொழில்களைப் பெற்றுக் கொள்ளவும் முடியும் எனவும் தெரிவித்தார்.

இறுதிப் போட்டியின்போது நற்பு ரீதியிலான நற்சத்திர வீரர்களின் மின்னொளிப் போட்டியும் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இம்மாநாட்டில் அமைப்பின் பொருளாளர் எம்.எச்.எம் ஹஸன் உள்ளிட்ட பல அகடமியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனடிருந்தனர்.

ஏ.எஸ்.எம். ஜாவித்

Wed, 10/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை