Header Ads

புதிய ‘ஐபோன் 12’ ரக திறன்பேசிகள் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஐபோன் 12 ரகத் திறன்பேசிகளை அறிமுகம் செய்துள்ளது.

வேகமான ஐந்தாம் தலைமுறை (5ஜி) கட்டமைப்பில் செயல்படும் அந்தத் திறன்பேசிகள் சில வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஹோம்பேட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர், ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஆகியவையே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் மற்றும் ஐபோன்களில் சக்திவாய்ந்த பிரோசஸர், நீண்ட பெட்டரி பெக்கப் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல நாடுகளிலும் நாளை முதல் இந்த திறன்பேசிகளை முன்பதிவு செய்யலாம். வரும் 23 ஆம் திகதி முதல் இது சந்தையில் கிடைக்கும்.

இருப்பினும், முதன்முறையாக இந்த வகை ஐபோன் திறன்பேசிகளோடு இலவசமாகக் காதொலிக் கருவியும் மின்னேற்றக் கருவியும் வழங்கப்பட மாட்டாது

கட்டுக்கடங்காமல் பெருகிவரும் மின்குப்பையைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே அதன் நோக்கம் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்தது.

வாடிக்கையாளர்கள், திறன்பேசிகளை மின்னேற்றம் செய்வதற்குரிய யு.எஸ்.பி–சி வடங்களைத் தனியே விலை கொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும். அது, வாடிக்கையாளர்கள் சிலருக்கு ஏமாற்றமளித்துள்ளது.

Thu, 10/15/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.