10 மில். டொலருக்கு பிரபல ஓவியம் ஏலம்

பிரபல ஓவியர் பேன்ஸ்கியின் ஓவியம் பிரிட்டனில் நடந்த ஏலத்தில் சுமார் 10 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த அந்த ஓவியக் கலைஞரின் படைப்புக்குக் கொடுக்கப்பட்ட 2ஆவது மிக அதிகமான விலை இதுவாகும். 19ஆம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்த இம்ப்ரெசனிஸ்ட் என்ற ஓவிய நுட்பத்தைக் கொண்டு ‘சோ மி தி டொனட்’ என்ற அந்த ஓவியம் வரையப்பட்டது.

ஏலம் நடைபெறுவதற்கு முன், அது 10 மில்லியன் டொலருக்கு குறைவாகவே விலைபோகும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. அதை வாங்கியவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. பூங்காவில் நீர் அல்லிகளைச் சித்தரிக்கும் பிரான்ஸ் ஓவியர் கிளாட் மோனட்டின் ஓவியத்தை 2005ஆம் ஆண்டில், தனது கற்பனையில் பேன்ஸ்கி மாற்றியமைத்தார். 2 தள்ளுவண்டிகளையும் செம்மஞ்சள் நிறப் போக்குவரத்துக் கூம்பையும் அதில் சேர்த்தார்.

Sat, 10/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை