கலிபோர்னியாவில் காட்டுத் தீ: 100,000 பேர் வெளியேற உத்தரவு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் தென் பகுதியில் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருவதால், அந்தப் பகுதியில் வசிக்கும் சுமார் 100,000 பேர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

காற்று கடுமையாக வீசுவதால் அந்த வட்டாரத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மின்சார விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

காட்டுத் தீயால் 7,200 ஏக்கர் காணி அழிந்திருப்பதாக மாநில தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. தீயை அணைப்பதற்கு மாநிலம் எங்கும் சுமார் 5,000 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து சுமார் 1.6 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பு நெருப்பில் பொசுங்கிப் போனது. பல்லாயிரம் வீடுகள் சேதமடைந்தன. 31 பேர் உயிரிழந்தனர்.

மணிக்குச் சுமார் 130 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் என்பதால், கலிபோர்னியாவின் பெரும்பாலான பகுதிகளில் உச்ச விழிப்பு நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Wed, 10/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை