வியட்நாமில் கடும் வெள்ளம்: உயிரிழப்பு 100ஐ தாண்டியது

மத்திய வியட்நாமில் ஏற்பட்டிருக்கும் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதோடு மேலும் 20 பேர் காணாமல்போயுள்ளனர்.

இந்த வெள்ளத்தினால் சுமார் 178,000 வீடுகள் நீரில் மூழ்கி இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்கள் தெரிவித்துள்ளன. துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவதில் மீட்பாளர்கள் திண்டாடி வருகின்றனர்.

இந்த வெள்ளத்தினால் வீதிகள், உட்கட்டமைப்புகள் மற்றும் விவசாய நிலங்களும் அழிவடைந்திருப்பதாக உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. வெள்ளம் காரணமாக 200,000 பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் வார இறுதியிலும் இந்தப் பகுதியில் கடும் மழை பெய்யக்கூடும் என்று அந்நாட்டு காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

Thu, 10/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை