கொரோனா தொற்று; ICC தலைமையகம் மூடல்

கொரோனா தொற்று; ICC தலைமையகம் மூடல்-COVID19-ICC Headquarters in Dubai Closed for Few Days

IPL தொடருக்கு பாதிப்பில்லை என அறிவிப்பு

பணிக்குழாம் ஊழியர்கள் சிலருக்கு COVID-19 தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) துபாயிலுள்ள தலைமையகம், சில நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, குறித்த தலைமையகத்தில் கடமையாற்றும் ஏனையோர் கட்டாய தனிமைப்படுத்தப்படுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர்களை தனிமைப்படுத்துமாறு ICC கேட்டுக் கொண்டுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள செய்தி வௌியிட்டுள்ளன.

குறித்த தலைமையகம் தற்போது முற்று முழுதாக கிருமிநீக்கம் செய்யப்பட்டு, சில நாட்களில் அதன் பணியை மீள ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இதன் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய 3 இடங்களை மையமாகக் கொண்டு இடம்பெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரிற்கோ, பங்குபற்றும் 6 அணிகளின் பயிற்சி நடவடிக்கைகளுக்கோ எவ்வகையிலும் பாதிப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sun, 09/27/2020 - 12:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை