தடம் மாறி அவுஸ்திரேலிய நதிக்குள் வந்த திமிங்கிலம்

அண்டார்டிகாவில் காணப்படும் ஹம்பேக் திமிங்கிலங்கள் தடம் மாறி அவுஸ்திரேலியாவின் நதியை அடைந்துள்ளன. இந்த வாரம் 3 ஹம்பேக் திமிங்கிலங்கள் வட அவுஸ்திரேலியாவில் உள்ள நதியில் காணப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர்.

அந்த நதியில் முதலைகள் அதிகமாக உள்ளன. 2 திமிங்கிலங்கள் பாதுகாப்பாகக் கடலுக்குச் சென்றுவிட்டன என்றும் எஞ்சிய ஒன்று இருக்குமிடம் விசாரிக்கப்படுகிறது என்றும் அதிகாரிகள் கூறினர்.

திமிங்கிலம் காணப்பட்ட பகுதியில் படகு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவில் ஹம்பேக் திமிங்கிலங்கள் காணப்படுவது இதுவே முதல்முறையாகும். சுமார் 52 அடி நீளம் கொண்டது என்று கணிக்கப்படும் இந்த திமிங்கிலத்தை முதலைகள் தொந்தரவு செய்வது சாத்தியமில்லை என்றபோதும் அது பற்றி கூடுதல் அவதானம் செலுத்தப்படுகிறது.

எனினும் ஆழமற்ற நீரில் திமிங்கிலம் சிக்கிக்கொண்டால் ஆபத்து இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tue, 09/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை