நுவனிதுவின் சதத்தினால் எஸ்எஸ்சி அணி வெற்றி

இலங்கை கிரிக்கெட் , 23 வயதுக்குட்பட்ட உள்ளூர் கழக அணிகளின் கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்து நடாத்தும் மேஜர் யூத் கிரிக்கெட் தொடரில் (20) மொத்தமாக 11 போட்டிகள் நிறைவுக்கு வந்தன.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற போட்டிகளில் குழு டி இற்கான மோதல் ஒன்றில் கொழும்பு எஸ்எஸ்சி கழகம், காலி கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக வெற்றி பெற்று இந்த தொடரில் தமது மூன்றாவது வெற்றியினைப் பதிவு செய்தது. எஸ்எஸ்சி அணியின் வெற்றிக்காக துடுப்பாட்டத்தில் நுவனிது பெர்னாந்து சதம் (108) பெற்று உதவ, இடதுகை வேகப்பந்துவீச்சாளரான கலன பெரேரா 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி பங்களிப்புச் செய்தார்.

மற்றுமொரு போட்டியில், மொஹமட் சமாஸ் பெற்றுக் கொண்ட 90 ஓட்டங்களுடனும், பசிந்து சூரியபண்டார (57), டினுக்க டில்ஷான் (53) ஆகியோரின் அரைச்சதங்களுடனும் சோனகர் கிரிக்கெட் கழக அணி இலங்கை துறைமுக அதிகார சபை அணிக்கு எதிராக 94 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இதேவேளை என்சிசி அணி தினேத் ஜயக்கொடி (78), கலன விஜேசிரி (50) ஆகியோர் பெற்ற அரைச்சதங்களுடன் செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்தினை தோற்கடித்து, இந்த தொடரில் தமது அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்துகொள்கின்றது.

இதேநேரம் களுத்துரை நகர கழகம் மற்றும் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் அணிகள் இடையில் நடைபெற்ற த்ரில்லர் மோதலில், கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் ஒரு விக்கெட்டினால் அபார வெற்றியினைப் பதிவு செய்தது. கோல்ட்ஸ் அணியின் வெற்றியினை தேசிய கிரிக்கெட் அணி வீரரான அவிஷ்க பெர்னாந்து அரைச்சதம் (58) பெற்று உறுதி செய்தார்.

இப்போட்டிகள் தவிர தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம், லங்கன் கிரிக்கெட் கழகம், புளூம்பில்ட், விமானப்படை, பிஆர்சி, இராணுவப்படை மற்றும் பதுரெலிய கிரிக்கெட் கழகம் ஆகியவை வெற்றிகளைப் பதிவு செய்த ஏனைய அணிகளாக மாறியிருந்தன.

Tue, 09/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை