ஹமாஸ் தலைவர் லெபனான் விஜயம்

இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் ஒத்துழைப்புகள் தொடர்பில் பலஸ்தீன தரப்புகளை சந்தித்து பேசுவதற்காக ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மைல் ஹனியே லெபனான் சென்றுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையே இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தும் அறிவிப்பு கடந்த ஓகஸ்ட் 23 ஆம் திகதி வெளியான நிலையில் 27 ஆண்டுகளின் பின்னரே ஹனியே, லெபனான் பயணித்துள்ளார்.

மிக அரிதான ஒரு சந்திப்பாக ஹனியே நேற்று பலஸ்தீன தரப்புகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது அமெரிக்கா இந்த ஆண்டு ஆரம்பத்தில் அறிவித்த மத்திய கிழக்கு அமைதித் திட்டத்தை எவ்வாறு கையாள்வது போன்ற விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.

மூன்றாவது அரபு நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தியதை பலஸ்தீனர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

மேலும் பல அரபு, முஸ்லிம் நாடுகளும் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Fri, 09/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை