விபத்தில் பெண் உட்பட இருவர் பலி; இருவர் காயம்

மட்டக்குளியில் இன்று (02) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் காயமடைந்துள்ளனர்.

லொறியொன்று, இரண்டு முச்சக்கரவண்டிகளுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டிச் சாரதியும் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் காயமடைந்த மேலும் இருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Wed, 09/02/2020 - 12:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை