ஆரவாரமின்றி பெலாரஸ் ஜனாதிபதி பதவியேற்பு

பெலாரஸில் கடந்த மாதம் நடைபெற்ற சார்ச்சைக்குரிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அலெக்ஸாண்டர் லுகஷென்கோ நாட்டின் ஜனாதிபதியாக 6ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.

அந்தத் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தலைநகர் மின்ஸ்கில் முன்னறிவிப்பின்றி கடந்த புதன்கிழமை நடைபெற்ற பதவியேற்று நிகழ்வில்் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். நூற்றுக்கணக்கான உயரதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கடந்த மாதம் 6ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் வெட்லானா ஷிகானோஸ்கயா பெரும்பான்மை பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன.

எனினும் அந்தத் தேர்தலில் 80 வீதத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்று லுகஷென்கோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. பெலாரஸின் சட்டபூர்வமான ஜனாதிபதியாக லுகஷென்கோவை ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகள் மற்றும் அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Fri, 09/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை