மருதமுனையின் முதல் பெண் கலாநிதி

தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகரான எம்.எம்.மஸ்றூபா ஹமீம் கலாநிதிப் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்துள்ளார். இவர் மருதமுனையின் முதல் பெண் கலாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மலேசிய முகாமைத்துவ விஞ்ஞானப் பல்கலைக் கழகத்தில் "இலத்திரனியல் கற்கை" தொடர்பான ஆய்வினை நிறைவு செய்தே கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞான பட்டதாரியான இவர், இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தின் பட்டப்பின் கல்வி டிப்ளோமா, கொழும்பு பல்கலைக் கழகத்தில் நூலக தகவல் விஞ்ஞான முதுகலைமாணி ஆகியவற்றைப் பூர்த்தி செய்துள்ளார்.

வெலிங்டன் விக்டோரியா பல்கலைக் கழத்தில் "தகவல் எழுத்தறிவும் தகவல் தொழிநுட்பமும்" தொடர்பான ஒருமாத கால புலமைப் பரிசில் பயிற்சி நெறியினையும் இந்தியாவில் "இலத்திரனியல் வள முகாமை" தொடர்பான பயிற்சி நெறியினையும் இவர் நிறைவு செய்துள்ளார்.

இவர் மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். மருதமுனை அல் -மனார் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் ஏ.எச்.எம்.மஜீதின் புதல்வியாரான இவர் உயிரியல் பாட ஆசிரியர் எம்.ஐ.நூறுல் ஹமீமின் பாரியாராவார்.

பெரியநீலாவணை தினகரன் நிருபர்

Wed, 09/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை