கொலம்பியாவில் ஆக்கிரமிப்பாளர் சிலையை கவிழ்த்த பழங்குடியினர்

கொலம்பியாவில் பழங்குடியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தென் மேற்கு நகரான பொபானில் உள்ள ஸ்பானிய ஆக்கிரமிப்பாளர் செபஸ்டியன் டி பெலகசாரின் சிலை தரையில் கவிழ்க்கப்பட்டுள்ளது.

1537 இல் இந்த நகரை நிறுவியவரான டி பெலகசார் கொலம்பிய வரலாற்றில் சர்ச்சைக்குரிய ஒருவராக உள்ளார். அவரது சிலை மீது கயிற்றை கட்டி கீழே வீழ்த்திய மிசான் சமூகத்தைச் சேர்ந்தவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அந்த சிலை ஐந்து நூற்றாண்டுகளில் இனப்படுகொலை மற்றும் அடிமைத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக பழங்குடித் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பல் கலாசார நகர் ஒன்றின் அடையாளத்திற்கு எதிரான தாக்குதலாக இது உள்ளது என்று பொபாயன் நகர மேயர் குறிப்பிட்டுள்ளார்.

தென் அமெரிக்காவின் வட மேற்கு பகுதிகளில் பல்வேறு பயணங்களை மேற்கொண்்டவராக டி பெலகசார் உள்ளார். தற்போதைய ஈக்வடோர் தலைநகர் குயிடோவும் அவரால் நிறுவப்பட்டதாகும். இந்த ஆக்கிரமிப்பாளர் தமது ஏனைய முன்னோர்களை கொன்று குவித்து நிலங்களை அபகரித்ததாக மிசாக் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Fri, 09/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை