எண்ணெய் விலை சரிவு

சவூதி அரேபியாவின் விலை குறைப்பு மற்றும் தொடரும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மசகு எண்ணெய் விலை கடந்த ஜூன் மாதத்தின் பின் முதல் முறையாக பீப்பாய் ஒன்று 40 டொலருக்கு குறைவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

நுகர்வு நாடுகளின் தேவை குறைந்தததால் உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியா ஆசியாவிற்கு விநியோகிக்கப்படும் மசகு எண்ணெயின் விலையை குறைத்துள்ளது. இதேபோன்று உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதி நாடான சீனாவின் பொருளாதாரம் உறுதியற்ற நிலையில் இருப்பதால் மந்தகதியில் இறக்குமதியை மேற்கொள்கிறது.

இந்நிலையில் ப்ரென்ட் மசகு எண்ணெய் 5.3 வீதம் வீழ்ச்சி கண்டு பீப்பாய் ஒன்று 39.78 டொலருக்கு விற்பனையானது.

எனினும் கடந்த ஓக்டோபர் மாதம் எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சிகண்டிருந்த நிலையில் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் உற்பத்தியை குறைத்து எண்ணெய் விலையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 09/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை