அட்டாளைச்சேனை ஹிறா நகர் வீதியை புனரமைக்க கோரிக்ைக

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பாலமுனை ஹிறா நகர் மீள் குடியேற்ற கிராமத்திற்குச் செல்லும் பாதையின் ஒருபகுதி நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

அவ் வீதியில் போக்குவரத்தில் ஈடுபடுவதில் தாம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருதாக விவசாயிகள், பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பாலமுனை பிரதான வீதியில் இருந்து ஹிறா நகர் மீள் குடியேற்ற கிராமத்திற்குச் செல்லும் 05 கிலோ மீற்றர் வீதியின் 02 கி.மீற்றர் அளவுடைய வீதியே பல வருடங்களாக சேதமுற்று காணப்படுகின்றது.

அதிகமான விவசாயிகள் தமது தொழில் நிமித்தம் நாளாந்தம் இந்த வீதியினூடாகவே பயணித்து வருகின்றனர். கடந்த பல நாட்களாக பெய்த மழையினால் இவ்வீதி மிக மோசமாக சேதமுற்றுள்ளதுடன் வீதியில் ஏற்பட்டுள்ள குழிகளில் நீர் நிரம்பி குளம் போல் காட்சி அழிக்கின்றது.

எனவே குறித்த வீதியின் அவல நிலையினை கருத்தில் கொண்டு, உரிய அதிகாரிகள் விரைவில் புனரமைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 

 

பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்

Wed, 09/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை