கால் இறுதிப் போட்டிகளில் ஒலிம்பிக், லக்கி ஸ்டார் அணிகள் வெற்றி

மருதமுனை யூனிவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையுடன் அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட லீக் விலகல் அடிப்படையில் நடாத்தி வந்த றிஷாத் பதியுத்தீன் கிண்ண அழைப்பு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கொரோனா -19 காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக இடை நிறுத்தப்பட்டிருந்து கடந்த 28ம் திகதி வெள்ளிக்கிழமை மருதமுனை மசூர்மௌலானா விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் ஆரம்பமாகியது.

வெள்ளியன்று நடைபெற்ற முதலாவது கால் இறுதிப்போட்டியில் கலந்துகொண்ட மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தினர் தன்னை எதிர்கொண்ட மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகத்தினை பலத்த போட்டிக்கு மத்தியில் (03-−01) கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்டு முதலாவது அரையிறுதிக்குத் தெரிவாகினர்

சட்டத்தரணி றிப்கான் ஏ. கரீம் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மேற்படி போட்டியின் போது அம்பாறை மாவட்ட மத்தியஸ்த சங்கத்தினைச் சேர்ந்த ஏ. எம். சப்றான் பிரதம நடுவராகக் கடமையாற்றினார்.

ஞாயிறு அன்று நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டியில் கலந்துகொண்ட கல்முனை லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் தன்னை எதிர்த்து ஆடிய ஏறாவூர் யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினை சுவாரஸ்யமான போட்டிக்கு மத்தியில் (05-−02) கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்டு இரண்டாவது அரை இறுதிக்கு தெரிவாகின.

சட்டத்தரணி எம்.ஏ.எம். முபீத் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மேற்படி போட்டியின்போது அம்பாரை மாவட்ட மத்தியஸ்த சங்கத்தினைச் சேர்ந்த வை.எல். யஹ்யா அரபாத் பிரதம நடுவராகக் கடமையாற்றினார்.

போட்டிக்கான ஏற்பாடுகளை அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் செயலாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம். ஐ. எம். ஏ. மனாபுடன் இணைந்து யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் ஏ. எம். றஜீ ஆசிரியர் மேற்கொண்டிருந்தார்.

கல்முனை சுழற்சி நிருபர்

Sat, 09/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை