பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும்

அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

கொவிட் 19வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் மீள திறக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் பாடசாலை சமூகம் முழுமையாக பின்பற்ற வேண்டுமென பாடசாலை அதிபர்களிடம் கல்வி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.   பாடசாலைகளில் தொற்று நீக்கிகளை தெளித்தல், சமூக இடைவெளியை பேணுதல், கைகளை கழுவுதல், முகக் கவசங்களை அணிதல் உட்பட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதில்லை என கல்வி அமைச்சுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. 

பாடசாலைகளில் சேவை வழங்கல், மாணவர்களை சிற்றூண்டிச் சாலைகளுக்கு அனுப்புதல் மற்றும் மாணவர்களை சமூகத்தில் நடமாடவிடும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்வதில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன், மாணவர்களும் இந்த வழிகாட்டல்களை தீவிரமாக பின்பற்ற வேண்டும் எனவும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.   அரசாங்கத்தின் தலையீட்டில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதிலும் உலகில் சுகாதார பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இன்னமும் இலங்கை பெயரிடப்படவில்லை. கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டால் அதற்கு முகங்கொடுக்க நாம் தயாராக வேண்டும் என வைத்தியர் ஜெயருவான் பண்டார தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

 

Thu, 09/17/2020 - 08:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை