கோமாவில் இருந்து மீண்டார் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர்

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னி கோமா நிலையிலிருந்து மீண்டுவிட்டதாகத் தெரியவந்துள்ளது. சிகிச்சையில் அவருடைய உடல்நிலை தேறிவருவதாக பெர்லின் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

நஞ்சூட்டப்பட்டதால் அவருக்கு ஏற்படக்கூடிய நீண்டகால விளைவு குறித்து இப்போதே கணித்து கூற இயலாது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

ரஷ்யாவில் ஊழலுக்கு எதிரான பிரசாரத்தில் தீவிரமாகச் செயல்பட்ட நவல்னி அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கடுமையாகக் குறைகூறிவந்தார். ரஷ்யாவில் உள்நாட்டு விமானப் பயணத்தின்போது நவல்னியின் உடல்நலம் குன்றியது. விமான நிலையத்தில் வழங்கப்பட்ட தேநீரில் அவருக்கு நஞ்சூட்டப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

நோவிச்சோக் எனும் நஞ்சு அவருக்குக் கொடுக்கப்பட்டதாக ஜெர்மனி முன்னர் கூறியது. சம்பவத்திற்கு ரஷ்யா தான் காரணம் என்பதை அது காட்டுவதாக அவரின் சகாக்கள் வலியுறுத்தினர். ஆனால், அந்தக் குற்றச்சாட்டை ரஷ்ய ஜனாதிபதி மாளிகை நிராகரித்து விட்டது.

இந்த நோவிச்சோக் நஞ்சு ரஷ்ய விஞ்ஞானிகளால் கடந்த 1971–1993 ஆண்டுகளுக்கு இடைபட்ட காலத்தில் உருவாக்கப்பட்டதாகும்.

Wed, 09/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை