நீதி அமைச்சருடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலினா பி. டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) ஆகியோருக்குமிடையே நேற்று (08) நீதி அமைச்சில் சந்திப்பு நடைபெற்றது.

நீதிமன்றங்களில் வழக்குகள் குவிதல், நீதித்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், சிறைச்சாலைகளில் நெரிசல், நீதிபதிகளுக்கு பயிற்சி அளித்தல், உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. இச்சந்திப்பில் சட்டத்தரணி பிரியந்த மாயதுன்னா, நீதி அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஜனக ரணதுங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

Wed, 09/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை