அமெரிக்கா மீது சீனா கண்டனம்

சீனா அதன் அணுவாயுத, ஏவுகணைத் திறனை மேம்படுத்துவதாகக் குறைகூறும் அமெரிக்க அறிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் தேசியப் பாதுகாப்பு, இராணுவத்தை நவீனமயமாக்குதல் ஆகியவை குறித்து அமெரிக்கா மீண்டும் அவதூறு பேசுவதாக சீன பாதுகாப்பு அமைச்சு சாடியது.

அமெரிக்க பாதுகாப்பு திணைக்கள அறிக்கையில், சீனா அதன் நில, ஆகாய, கடற்படைகள் அனைத்தையும் வலுப்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தது.

தாய்வானைக் கைப்பற்றவோ, அதனுடன் போரிடவோ அவை பயன்படுத்தப்படலாமென அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்தது.

ஆனால் அந்த வட்டாரத்தில் தைவானிய அரசாங்கமும் வெளிநாட்டுச் சக்திகளும் பிரச்சினை உண்டாக்குவதாக சீன பாதுகாப்பு அமைச்சு குறைகூறியுள்ளது.

அமெரிக்கா வட்டாரப் பூசல்களைத் தூண்டிவிடுவதாகக் கூறிய சீனா, மத்திய கிழக்கு வட்டாரத்தில் அமெரிக்கா தலையீட்டை அதற்கு ஆதாரங்காட்டியது.

Tue, 09/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை