கல்முனையைச் சேர்ந்த இருவர் கௌரவிப்பு

கிழக்கு மாகாண வர்ண விளையாட்டு விழா:

45 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 4X100 மீற்றர் அஞ்சல் ஒட்டப்போட்டியில் 2 ஆம் இடத்தை பெற்று கிழக்கு மாகாணத்துக்கு பெருமை தேடி தந்ததற்காக ஜே. எம்.இன்சாப் மற்றும் மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளர் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம்.அப்ராஜ் ரிலா ஆகியோர் கிழக்கு மாகாண வர்ண விளையாட்டு விழாவில் வைத்து கௌரவிக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா தலைமையில் அம்பாறை ஹாடி தொழிநுட்ப கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது 45 வது தேசிய போட்டியில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மாவட்டங்களில் இருந்து பங்குபற்றி பதக்கங்களை வென்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்ளும் கெளரவிக்கப்பட்டனர்.

இக் கௌரவிப்பு விழாவில் கிழக்கு மாகாண அளுநர் அனுராதா யகம்பத் மற்றும் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க உள்ளிட்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு பணப்பரிசில்கள், சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

 

கல்முனை மத்திய தினகரன் நிருபர்

Fri, 09/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை