‘கொடூரக் கொலை’ பற்றி மொசம்பிக்கில் விசாரணை

மொசம்பிக்கில் பதற்றம் கொண்ட கபோ டெல்காடோ மாகாணத்தில் இராணுவ சீருடை அணிந்தவர்கள் நிர்வாணமாக இருக்கும் பெண் ஒருவரை கொலைசெய்யும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டு நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வீடியோ கட்சியை கண்டித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு, பயங்கரமானது என்று வர்ணித்துள்ளது. அதன் நம்பகத் தன்மை உறுதிப்படுத்தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

இந்த கொலை தொடர்பில் உரி மைக் குழுக்களும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

மொசம்பிக் நாட்டின் வடக்குப் பகுதியில் இஸ்லாமியவாத ஆயுதக் குழு ஒன்றுக்கு எதிராக இராணுவம் கடந்த மூன்று ஆண்டுகளாக போராடி வருகிறது.

இந்த கிளர்ச்சியை கட்டுப்படுத்த முயலும் இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனை அரசு நிராகரித்துள்ளது. இந்நிலையில் கொலை தொடர்பான இரண்டு நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஒன்று பல்வேறு உரிமைக் குழுக்களால் கடந்த திங்கட்கிழமை பகிரப்பட்டுள்ளது.

அதில் இராணுவ சிருடை அணிந்த ஆண்கள் பெண் ஒருவரை சூழ்ந்து கொண்டு அந்தப் பெண்ணின் தலை மற்றும் உடல் மீது பல தடவைகள் தடியால் தாக்குவதும் பின்னர் துடுப்பாக்கிச் சூடு நடத்துவதும் பதிவாகியுள்ளது.

“வீதியின் பக்கமாக வைத்து அவளை கொல்லு” என்று போர்த்துகீச மொழியில் பின்னணியில் கூறுவதும் பதிவாகியுள்ளது.

Wed, 09/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை