ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் மீது நஞ்சூட்டப்பட்டதற்கு ஆதாரம்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னி மீது நரம்பு மண்டலத்தை தாக்கும் நொவிசொக் நஞ்சு செலுத்தப்பட்டதற்கு தெளிவான ஆதாரம் இருப்பதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.

அவர் கொலை முயற்சிக்கு முகம்கொடுத்திருப்பதாகவும் இதற்கு ரஷ்யா பதிலளிக்க வேண்டும் என்று உலகம் எதிர்பார்ப்பதாகவும் ரஷ்ய அதிபர் அங்கேலா மேர்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் செர்பிய விமானத்தில் சுகவீனமுற்ற நவல்னி சிகிச்சைக்காக பெர்லின் அழைத்துச் செல்லப்பட்டார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உத்தரவின் பேரில் அவர் நஞ்சூட்டப்பட்டிருப்பதாக அவருக்கு ஆதரவாளவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

எனினும் 2018 ஆம் ஆண்டு பிரிட்டனில் நொவிசொக் விசத்தைக் கொண்டு முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிரிபல் மற்றும் அவரது மகள் மீதும் நஞ்சூட்டப்பட்டது. இதன் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக பிரிட்டன் அப்போது குற்றம்சாட்டியது.

அலெக்சிக்கு நேர்ந்தது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

புட்டின் மற்றும் அவரது அரசின் ஊழலை கடுமையாக விமர்சித்து வந்த அலெக்சிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு உள்ளது.

Fri, 09/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை