ஆணைக்குழுவில் ஆஜராக ஹக்கீமிற்கு அழைப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் தெடர்பாக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே நாளை வெள்ளிக்கிழமை அவரை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு பல்வேறு தரப்பிடம் வாக்குமூலம் பெற்று வருகிறது. கடந்த வாரங்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,முன்னாள் பிரதமர் ரணில் விக்கரமசிங்க ,முன்னாள் அமைச்சர்கள்,பாதுகாப்பு உயரதிகாரிகள் உட்பட பலரிடம் வாக்குமூலம் பதிந்தது.இந்த தாக்குதல் தொடர்பில் கடந்த அரசு மீது குற்றஞ்சாட்டப்பட்டது தெரிந்ததே.
from tkn
Post a Comment