‘விசாட்’ தடைக்கு அமெ. நீதிமன்றம் முட்டுக்கட்டை

குறுஞ்செய்தி மற்றும் பணக் கொடுப்பனவுக்கான சீனாவின் விசாட் செயலி மீதான அமெரிக்க அரசின் தடை முயற்சிக்கு நீதிபதி ஒருவர் முட்டுக்கட்டை போட்டுள்ளார்.

இந்தத் தடை அரசியலமைப்பின் முதல் திருத்தமான கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்வதை தீவிரமாகக் கேள்விக்குறியாக்குகிறது என்று அமெரிக்க நீதிவான் நீதிபதி லோரா பீலர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமுலுக்கு வரும் வகையில் அமெரிக்காவில் விசாட் செயற்பாடுகளுக்கு தடைவிதிக்கும் அறிவிப்பை வர்த்தகத் திணைக்களம் வெளியிட்டது.

எனினும் இந்த செயலி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இந்த செயலி பயனர்களின் தரவுகளை சீன அரசுக்கு வழங்கக்கக் கூடும் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்தத் தடைக்கு எதிராக அமெரிக்காவின் விசாட் பயனர்கள் குழு ஒன்றே வழக்குத் தொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தடைக்கு உள்ளாகும் நெருக்கடியில் இருக்கும் மற்றொரு சீன செயலியான டிக் டொக் தடையை தவிர்க்க அமெரிக்காவின் ஒராகில் நிறுவனத்திற்கு அதனை விற்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Tue, 09/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை