லங்கா ப்ரீமியர் தொடரில் பங்கேற்கும் முதல் அணி அறிமுகம்

லங்கா ப்ரீமியர் லீக் (எல்.பி.எல்) ரி20 தொடரில் பங்கேற்கவிருக்கின்ற முதல் அணியினை அறிமுகம் செய்யும் நிகழ்வு (2) பாகிஸ்தானில் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

லங்கா ப்ரீமியர் லீக் (எல்.பி.எல்) தொடரில் பங்கேற்கவிருக்கும் குறித்த அணி ”காலி கிளேடியட்டர்ஸ் ” எனப் பெயரிடப்பட்டுள்ளதோடு, அந்த அணி பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஒன்றினால் கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றது. இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இந்த ஆண்டின் நவம்பர் மாதம் தொடக்கம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற லங்கா ப்ரீமியர் லீக் தொடரில், காலி கிளேடியட்டர்ஸ் அணியுடன் சேர்த்து மொத்தமாக இலங்கையின் மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் 5 அணிகள் பங்குபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. டுபாய் நகரினைச் சேர்ந்த IPG என்னும் நிறுவனம் லங்கா ப்ரீமியர் லீக் தொடரினை நடாத்துவதற்கான அனைத்துவகை உரிமைகளையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அத்தோடு, இந்த லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் 60 தொடக்கம் 70 வரையிலான வெளிநாட்டு வீரர்களும் விளையாட ஆர்வம் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Fri, 09/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை