பனியுக கால கரடி எச்சம் ரஷ்யாவில் கண்டுபிடிப்பு

ரஷ்ய ஆர்டிக் பிரதேசத்தில் பாதுகாக்கப்பட்ட நிலையில் பனியுக காலத்து கரடி ஒன்றின் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  

வட கிழக்கு ரஷ்யாவின் லியாகொஸ் தீவுகளில் பனிக்கட்டிகள் உருகிய நிலையில் கலைமான் மெய்ப்பாளர்களுக்கு இந்தக் கரடி தெரிந்துள்ளது.  

22,000தொடக்கம் 39,500ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக நம்பப்படும் பழுப்பு கரடி இனத்தைச் சேர்ந்த இந்தக் கரடியின் பற்கள், மூக்குப் பகுதி எந்த சேதமும் இன்றி அப்படியே காணப்படுகின்றன.  

இந்த கரடி பற்றிய ஆய்வினை யகுட்ஸ் நகரில் உள்ள வட கிழக்கு மத்திய பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது.  

ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தில் உள்ள நிரந்தர பனிப்பகுதி உருகி வருவதால் அண்மைக் காலத்தில் பண்டைய மம்மொத் யானைகள், கம்பளி காண்டாமிருகங்கள், குகை சிங்கக் குட்டிகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  

18,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நாய்க்குட்டி ஒன்றின் உடல் சைபீரிய உறைபனியில் கடந்தாண்டு இதேபோன்று நல்ல நிலையில் கண்டெடுக்கப்பட்டது.   

Thu, 09/17/2020 - 09:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை