அனைத்துப் பாடசாலைகளிலும் நாளை முதல் கல்வி நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பும்

-கல்வி அமைச்சின் செயலாளர்

கொரோனா வைரஸ் சூழ்நிலையால் மூடப்பட்ட நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் நாளை 8ம் திகதி முதல் கல்வி நடவடிக்கைககள் வழமைக்குத் திரும்புவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: கொரோனா  வைரஸ் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக பல கட்டங்களாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. அதற்கிணங்க ஆரம்ப வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை 8ம் திகதி முதல் ஆரம்பமாவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2ம் திகதி முதல் ஆறு தொடக்கம் 13 தரம் வரையிலான மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கிணங்க,நாளைய தினம் 7ம் திகதி பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு வகுப்புகளின் ஆசிரியர்கள் மற்றும் ஆளணியினர் பாடசாலைகளுக்கு வருகை தரவுள்ளனர். அதனையடுத்து நாளை மறுதினம் குறித்தபடி அனைத்து கல்விநடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மாணவர்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதில் அலட்சியம் காட்டுவதாக முறைப்பாடுகள் கிடைத்துவருகின்ற நிலையில் சுகாதார நடைமுறைகள் தொடர்ச்சியாக பின்பற்றப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Mon, 09/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை