Header Ads

விவசாய, கல்வித்துறைகளுக்கு அளப்பரிய சேவை செய்த இரத்நாயக்க

அனுதாப பிரேரணையில் அமைச்சர் தினேஷ்

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம். கே. பி. இரத்நாயக்க விவசாயத் துறைக்கும் கல்வித் துறைக்கும் அளப்பரிய சேவை செய்தவர் என சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமரர் இரத்னாயக்க தொடர்பான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும் போதே சபை முதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி அனுதாப பிரேரணையில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சியைச் சேர்ந்த பலரும் உரையாற்றினர்.

அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவிக்கையில்; பண்டுவஸ்நுவர பாராளுமன்ற உறுப்பினர் 23 வயதில் அரசியலுக்கு வந்தவர். வடமேல் மாகாணத்தில் விவசாயத்துறை கல்வித்துறை மற்றும் சமூக சமய செயற்பாடுகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அவர் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 09/26/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.