வடக்கில் கடந்தகால நிலைமை ஏற்படின் மீண்டும் அதே பதிலே

தற்போது முழு நாடும் பாதுகாப்பாக உள்ளது

நாடு பாதுகாப்பாகவே இருக்கிறது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகுந்த கவனத்துடனேயே செயற்பட்டுவருகிறோம். மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும்என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். ஊடக நிறுவன தலைவர்களுடன் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடக்கில் திலீபனை நினைவு கூருவதற்கு அனுமதி கோரி ஹர்த்தால் அனுஷ்டிப்புகள் ஏற்பாடு செய்யப்ட்டிருந்தன. அரசாங்கம் இதனை எவ்வாறு நோக்குகிறது? முன்பிருந்த நிலை  மீண்டும் ஏற்ப்ட்டுவிடுமா? என ஊடகவியலாளர் ஒருவர் பிரதமரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமரின் அருகிலிருந்த அமைச்சர்டக்ளஸ் தேவானந்தா தனது சட்டைப் பைக்குள்ளிருந்து சிறிய புகைப்படமொன்றை எடுத்துக் காண்பித்து, ‘திலீபன் ஒரு கொலைகாரன், இதோ இந்தப்படத்திலிருக்கும் எனது தம்பியை கடத்தியவர்,எனது குடுப்பத்தினருக்கு அழிவை ஏற்படுத்தியவர்.அவர் விடுதலைப்புலி உறுப்பினர்.

திலீபனை நினைவு கூருவதாக சுய அரசியல் இலாபம் தேடும் முயற்சி’ என தெரிவித்தார்.

 

 

 

கே.அசோக்குமார்

Wed, 09/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை